வாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பொய்த்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால், பசி பட்டினி அதிகரித்து வருகிறது. தற்போது, 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. லண்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களில், 50 விழுக்காட்டினர் 5 வயதிற்கும் கீழ் உள்ள வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட மிக மோசமான பாதிப்பு என்றும், இந்த ஆண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
Next Story