"பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை"... கணவனை அடித்து கொன்றுவிட்டு - நேராக காவல்நிலையம் வந்த மனைவி
ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.
இவர் தறிபட்டறையில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பட்டறையில் வேலை செய்யும் பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சுப்பிரமணியை அவரது மனைவி பலமுறை கண்டித்த நிலையில், இருவருக்குமிடையே கடும் தகராறு உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த அவர், தூங்கி கொண்டிருந்த சுப்பிரமணியை கட்டையால் அடித்து கொன்று விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story