விமான நிலையத்தில் சர்வர் கோளாறு - பயணிகள் பதற்றம்

x

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பாயின்டில் திடீரென்று சர்வர் கோளாறு ஏற்பட்டது.

இதனால், அங்கு பயணிகள் பதற்றம் அடைந்தார்கள்.

இதையடுத்து, பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்றும், அதுவரை பொறுமை காக்குமாறும் விமான நிலைய ஆணையம் கேட்டுக் கொண்டது.

சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, சர்வரில் இருந்த கேளாறு சரிசெய்யப்பட்டது.

சர்வர் செயல் இழந்ததால், விமானப் பயணத்துக்கு பயணிகள் கூடுதல் அவகாசம் கேட்டனர்.

மும்பையின் கட்டுமானப் பணியின்போது கேபிள் சேவை துண்டிக்கப்பட்டதால், சர்வர் சிஸ்டம் பழுதானதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்