செந்தில் பாலாஜி விவகாரம்... "IT வளையத்தில் திமுக நிர்வாகி..!"
கோவையில் கோல்ட் வின்ஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சீலை அகற்றி மீண்டும் சோதனை நடத்தினர். சீலை அகற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர். சீல் அகற்றப்பட்ட பின்னரும் வீடுகளில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். பின்னர், அருண் அசோசியேட் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை காந்திபுரத்தில் இருக்கும் கிஸ்கால் இரும்பு கம்பி அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கிஸ்கால் இரும்பு கம்பி உரிமையாளர் கண்ணப்பன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆவார். வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காததால் கிஸ்கால் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.