செந்தில் பாலாஜிக்கு 2 மணியில் கண்டம்..கருப்பு நாளான செவ்வாய் - நொடிக்கு நொடி நடந்த சம்பவம்

x

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைது காரணமாக, தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.... அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்கிங் முதல், நீதிமன்ற விசாரணை வரை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 13ம் தேதி கருப்பு செவ்வயாக விடிந்தது. வழக்கம் போலவே காலை வாக்கிங் சென்றவருக்கு, பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை வந்துள்ள தகவல் வந்து சேர்ந்தது...

5 கார்களில் வந்திருந்த அமலாக்கத்துறையினர், காலை 8 மணிக்கு தங்கள் சோதனையை துவக்கினர். அவருக்கு சொந்தமான ஆர்.ஏ. புரம், அபிராமி புரம் வீடுகளிலும் சோதனை விரிந்தது.

இதற்கிடையே, அமலாக்கத்துறையின் ஒரு டீம் மதியம் 2 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்குள் புகுந்தது.

அதே நேரத்தில், வீட்டில் உள்ள செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.

அமலாக்கத்துறையின் சோதனை, முதலமைச்சரையும் திடுக்கிடச் செய்த நிலையி்ல், இரவு 11 மணி அளவில் முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர்....

17மணி நேரம் நடந்த சோதனையும், விசாரணையும் இரவு 1:50 மணியளவில் முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்....

பல நேரங்கள் விசாரணை வலையத்திற்குள் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது... உடனாடிய ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவம் அறிந்த மா. சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் ஓமாந்தூரார் மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியை பார்க்க வருகை தந்தனர்.

அதிகாலை 4:50 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டது...

அதிகாலை 5 மணி அளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்....

10:17 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார்.

இதற்கிடையில் கைது செய்ததில் விதி மீறல்கள் இருப்பதாக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது...

தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 11 மணிக்கு ஓமாந்துரார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் 12:25 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் உள்ள மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் பைப்பாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துறை செய்தனர்...

பின்னர் அவரை பரிசோதிக்க நான்கு பேர் கொண்ட இ எஸ் ஐ குழு ஒன்று 12:50 அளவில் வந்து சேர்ந்தது. அவர்களும் பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர்.

பிற்பகல் 2:15 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில்,திடீரென வழக்கு விசாரணையில் இருந்து ஒரு நீதிபதி பின்வாங்கினார்.

அமலாக்க துறை கஷ்டடியில் எடுக்க முயற்சி செய்த நிலையில் 4 மணி அளவில் மாவட்ட நீதிபதி அல்லி செந்தில்பாலாஜியிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

மாலை 4.10 மணியளவில்,கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்

நீதிமன்ற காவலை நிராகரிக்க வேண்டும் அல்லது காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமெனவும் செந்தில்பாலாஜி தரப்பில் 4.20க்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கைது நடவடிக்கையில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என செந்தில்பாலாஜிதரப்பும், முறைப்படிதான் கைது நடந்தது என அமலாக்கத்துறையும் வாதிட்டனர்.

அமலாக்கத்துறை சார்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு செய்துள்ளனர்.

இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு செந்தில்பாலாஜி தரபிற்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.




Next Story

மேலும் செய்திகள்