"அவன் அழிஞ்சி போனது தான் வரலாறு.." செந்தில் பாலாஜி கைது.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆவேசம்
திமுகவை தொட்ட பாஜக தேர்தலில் ஜீரோவாகும் எனவும், திமுகவை தொட்டவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூரில், திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா. மோ அன்பரசன், திமுகவின் செல்வாக்கை குறைக்க செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எதையும் சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறினார். கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுக்கவில்லை என கூறியதோடு, அமித்ஷாவிற்கு வரலாறு தெரியாது எனவும் விமர்சித்தார்.
Next Story