ஜூனியருக்கு சாட்டையடி கொடுத்த சீனியர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய பயங்கரம்.. ராகிங் ராஜாக்கள் அட்டூழியம்..

x

திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சாட்டை கயிற்றால் அடித்து ராகிங் செய்த சீனியர் மாணவர்களின் வீடியோக்கள் பரவிய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

கல்லூரியில் படிக்கக்கூடிய எஸ்சி எஸ்டி மாணவர்கள் தங்கும்

விடுதிகளில் ராகிங் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விடுதியில் உள்ள ஜூனியர் மாணவர்கள், சீனியர் மாணவர்கள் சொன்ன செயல்களை, செய்யாததால் ஆத்திரமடைந்த

சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை சாட்டை கயிற்றால் அடிக்கும் வீடியோ வைரலாக சமூக வலைதளத்தில் பரவியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கலைக் கல்லூரியின் முதல்வர் கலைவாணி, ராகிங்கில் ஈடுபட்ட 8 சீனியர் மாணவர்களை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார் மேலும் அவர்களை அரசு எஸ் டி எஸ் சி விடுதியில் இருந்து வெளியேற்றினார்.

இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கல்லூரியிலிருந்து ராகிங் தொடர்பாக காவல் துறையில் எந்த புகார் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது..

கல்விக் கூடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிப்பதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க உதவும்...


Next Story

மேலும் செய்திகள்