11-ஆம் வகுப்பு மாணவரை சரமாரியாக தாக்கிய சீனியர் மாணவர்கள் - பதறவைக்கும் வீடியோ காட்சி
கேரள மாநிலம், கண்ணூர் அருகே அரசு பள்ளியில் ராகிங் செய்தபோது, 11-ஆம் வகுப்பு மாணவரை சீனியர் மாணவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது சகல் என்ற மாணவன், தலைமுடியை சற்று நீளமாக வைத்திருந்ததால், இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அதற்கு முகமது சகல் மறுப்பு தெரிவிக்கவே, அவரை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் தாக்கப்பட்ட காட்சி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Next Story