செமஸ்டர் விவகாரம்..! - "மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறி போகும் ஆபத்து ?"

x

பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் அச்சடிப்பு தாமதமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் மே மாதம் முடிவடையும் என கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால் இப்போது தேர்வுகள் மே 25-தேதி தொடங்கி ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இணைவு பெற்ற கல்லூரிகளும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இனி தேர்வு முடிவுகள் ​ஜூலை மாதம் மத்தியில் மட்டுமே வெளி வரும் சூழலால், பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் உயர் கல்வி இடங்கள் பறி போகும் நிலை உருவாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்