தேனி முழுவதும் போதைப்பொருள் விற்பனை..குட்டி Rolex போல் வலம் வந்த இருவர்

x

தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டி முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவருடைய பெயர் குமரேசன் என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கர்நாடகாவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, அதனை தேனி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, குமரேசனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஈஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டன் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்