"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி" சீமான் கண்டனம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில், தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளை நீக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், வன்மையான கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். தனிநபரின் அனைத்து தகவல்களை கட்டாயப்படுத்தி ஆதாரோடு இணைத்துவிட்டு, தனி மனிதரின் தரவுகளை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்போவதாக பாஜக அரசு கூறுவது, மோசடித்தனம் எனவும் சீமான் விமர்சித்துள்ளார்.
Next Story