காளியம்மன் கோயிலுக்கு சீல் விவகாரம்...ஆட்சியருடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை - கரூரில் பரபரப்பு
கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவின் போது, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் மற்றொரு சமூகத்தினர் வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால், காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளை முற்றுகையிட்டதாக 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
Next Story