தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. சதம் அடித்த மாவட்டங்கள்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டின் 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்தாண்டு சென்னையில் முதல்முறையாக வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கோயம்புத்தூரில்101.66 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், தர்மபுரியில் 102.20 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், கரூரின் பரமத்தி பகுதியில் 104.90 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலைய பகுதியில் 102.56 டிகிரி பாரன்ஹீட்டும், சேலத்தில் 103.64 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூரில்103.28 டிகிரி பாரன்ஹீட்டும் வெயிலின் அளவாக பதிவானது.
திருத்தணி 102.20 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், வேலூரில் 104.2 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோட்டில், 105.44 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.