பள்ளி சீருடையில் பைக் திருட்டு "மொதல்ல பார்க்கணும், அப்பறம்தான் தூக்கணும்" - வெளியான சிசிடிவி காட்சி
- தென்காசி அருகே பள்ளி சீருடையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
- தென்காசியை சேர்ந்த பாலமுருகன் தன்னுடைய பிளக்ஸ் டிசைனிங் கடையின் முன்பாக தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
- சாவி காணாமல் போனதால் வேறு சாவி செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திடீரென மாயமாகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
- அப்போது அவர்கள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது பள்ளி சீருடை அணிந்த நபர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
- மேலும் வாகனமும் காசி விஸ்வநாத சுவாமி கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
- இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
Next Story