"STUDENTS கனவுக்கு உயிர்"... "இதுவே எழுதும், பேசும்.." - பள்ளி மாணவனின் SMART ROBO
திருவாரூர் மாவட்டம், ஈசனக்குடியை சேர்ந்த மாணவன் உருவாக்கிய பேசும் ரோபோவை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் விக்னேஸ்வரன் என்ற மாணவன், 107 மொழிகள் பேசும் மனித ரோபோ மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலலளிக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களோடு பேசவும், மனிதர்கள் போல் எழுதும் வகையிலும் புதிய ரோபோவை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Next Story