"ஸ்கூல் போக மாட்டேன் விடுங்க.."தர தரவென இழுத்து சென்ற தாய்..தெறித்து ஓடிய சிறுவன்... தீயாய் பரவும் வீடியோ
"ஸ்கூல் போக மாட்டேன் விடுங்க.."தர தரவென இழுத்து சென்ற தாய்..தெறித்து ஓடிய சிறுவன்... தீயாய் பரவும் வீடியோ
பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை தரதரவென இழுத்துச் சென்று பள்ளியில் விடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக இரண்டு நாள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்டது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன்,பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்துள்ளார். ஆனால் மாணவனின் தாய் மாலதி மாணவனை தெருக்களில் தரதரவென இழுத்துச் சென்று அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் வகுப்பறையில் விட்டுச் சென்றார். தாயின் பிடியில் இருந்து தப்பி ஓடியதும், பின்னர் தாயும், இளைஞர்களும் சிறுவனை துரத்திச் சென்று வகுப்பறையில் ஆசிரியரிடம் ஒப்படைத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Next Story