மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு... உயர்நீதிமன்றத்தை நாடிய பள்ளி தாளாளர் ரவிக்குமார்

x

கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தனது ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்காமல், விசாரிக்க உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 29ம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக்கூடாது என சிபிசிஐடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி மரணம் தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி காவல்துறை சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை பொறுத்து, ரவிக்குமார் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி, அவரது மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்