தன் வினை தன்னை சுடும்.. வாயில்லா ஜீவன்களை அழிக்க நினைத்த நபருக்கு சிதறிய கைகள்.. குமரியில் பகீர்

x

குமாரபுரம் பகுதியை சேர்ந்த டைடஸ் என்பவர், தனது தென்னந்தோப்பில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை அழிக்க, நண்பர்களுடன் சேர்ந்து வெடி பொருட்கள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக வெடி மருந்து வெடித்ததில், தாமஸ் என்பவரின் இரண்டு கை விரல்கள் சிதைந்தன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த கன்னியாகுமரி கியூ பிரிவு போலீசார், தடை செய்யப்பட்ட வெடி மருந்துகள் எப்படி கிடைத்தன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்