2 யூ டியூப் சேனல்கள் மீது சரத்குமார் பரபரப்பு புகார்
2 யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் புகார் கொடுத்துள்ளார்.
இரண்டு யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் அளித்துள்ள புகாரில், தன்னை பற்றியும், ராதிகா உள்ளிட்ட தனது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறாகவும், இழிவாகவும் அந்த சேனல்கள் வீடியோ வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று அவதூறு பரப்பும் மேலும் சில யூ டியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Next Story