கள்ள காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் - அப்பாவியான ஆக்டிங்கில் அதிர்ந்த போலீசார்
- சங்கரன்கோவிலில் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.
- தென்காசி மாவட்டம் ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த மாரியம்மள், கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
- இந்நிலையில் முத்துகாலடி என்பவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியுள்ளது.
- மாரியம்மாள் பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக முத்துகாலாடிக்கு சந்தேகம் ஏற்படவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- இருவரும் தனியாக இருந்தபோது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த முத்துகாலாடி மாரியம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். குற்றத்தை மறைக்க உடலை ரயில்வே தண்டவாளத்தின் அருகே போட்டுள்ளார்.
- போலீசார் நடத்திய விசாரணையில் முத்தக்காலடிக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- இதையடுத்து முத்துகாலடி அவருக்கு உதவிய சுப்பையா பாண்டியை போலீசார் கைது செய்தனர். மாரியம்மாள் உடலை மீட்டுச் சென்றபோது எதுவும் தெரியாதது போன்று முத்துகாலாடி வேடிக்கை பார்த்தபடி இருந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story