கடலில் குப்பைகளை கொட்டும் தூய்மை பணியாளர் | சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் | Kanyakumari
கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் பகுதியில், குப்பைகளை கடலில் கொட்டும் தூய்மை பணியாளர் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், "குப்பையில்லா குமரி" என்ற திட்டத்தை தொடங்கி அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமாரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆனால், குளச்சல் துறைமுகம் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, நகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் கடலில் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
Next Story