சம்பன்னி பீரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா - தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சம்பன்னி பீரேஸ்வரர் கோயிலில், குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் சம்பன்னி பீரேஸ்வரர், வீரபத்திர சுவாமி உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்கள் மேளதளங்கள் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது தலைமேல் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.
Next Story