சொத்து பிரிப்பதில் ஏமாற்றிய அண்ணன்... டவரில் ஏறி தம்பி செய்த அதிர்ச்சி சம்பவம் - கீழே நின்று கதறி அழுத பேரன், பேத்தி
- சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நிலம் பாகப்பிரிவினையில் அண்ணன் ஏமாற்றி விட்டதாக கூறி, தம்பி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாழப்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கும், அவருடைய சகோதரர் ராமசாமிக்கும் இடையே நிலம் பாகப்பிரினை செய்வதில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
- இந்நிலையில், வரதராஜன், மன்னாயக்கன்பட்டியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.
Next Story