ஒருபுறம் கடின உழைப்பாளிகள்.. மறுபுறம் கொள்ளை கும்பல்.. முதலாளியை கத்தியால் குத்திவிட்டு பணத்தோடு ஜூட் விட்ட வடமாநிலத்தவர்கள்

x

தர்மபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டி நடூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் மற்றும் பெர்ஜி ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் வேலை முடிந்து வியாபார பணத்தை எடுத்துக்கொண்டு சந்தோஷ் கிளம்பியிருக்கிறார்.

அப்போது வழிமறித்த தொழிலாளர்கள் இருவரும், சந்தோஷை கத்தியால் குத்தி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் உயிரிழந்த நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்