பிறந்த நாளே இறந்த நாளான சோகம்... Surprise கொடுக்க நினைத்தவருக்கு நேர்ந்த விபரீதம்
- சேலத்தில் பிறந்தநாளன்று சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்துள்ளனர்.
- சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.
- தனியார் கல்லூரி மாணவரான இவர், நண்பர்களுடன் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
- பின்னர், அவரது நெருங்கிய நண்பர்களான சுந்தர் மற்றும் கௌதம் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டு, இன்ப அதிர்ச்சியாக ரஞ்சித்குமாரை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
- அப்போது, சாலை விபத்தில் சிக்கி ரஞ்சித்குமார் மற்றும் கௌதம் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story