பொங்கலை முன்னிட்டு களை கட்டிய மண்பானை விற்பனை
வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு மண் பானை, மண் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் மண்பாண்ட பொருள்களை செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 60 மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் சரியான வருமானம் இல்லாமல் இருந்த நிலையில், வரும் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்காக தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மண்பாண்டங்கள் செய்ய போதுமான அளவு களிமண் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story