சிவப்பு நிற உவர்நீர் மண்புழு விற்பனை - ஒருவர் அதிரடி கைது
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே சட்டத்திற்கு புறம்பாக சிவப்பு நிற உவர்நீர் மண் புழு விற்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வனத்துறை அலுவலகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தடை செய்யப்பட்ட சிவப்பு நிற உவர்நீர் மண் புழுவை இறால் பண்ணைக்கு விற்க முயன்றதாக வேம்புலி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது காரில் இருந்து 10 கிலோ சிவப்பு நிற உவர்நீர் மண் புழுவும், வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்து 30 கிலோ சிவப்பு நிற உவர்நீர் மண் புழுவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story