நம்மூர் பையனுக்கு 'ஜர்க்' காட்டிய சஹர்.. அடக்க முடியாமல் சிரித்த தோனி
முதலாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் பேட்டர் விஜய் சங்கரை, சென்னை பவுலர் தீபக் சஹார் மேன்கட் செய்ய முயன்றார். ஆட்டத்தின் 14வது ஓவரை தீபக் சஹார் வீசியபோது, நான் ஸ்ட்ரைக்கில் (NON STRIKE)இருந்த விஜய் சங்கர் கிரீஸைவிட்டு நகர முயன்றார். இதனைக் கவனித்து பந்து வீசுவதற்கு முன்பாக தீபக் சஹார், ஸ்டம்ப்பில் பந்தை அடித்தார். எனினும், கிரீஸ்-க்குள் விஜய் சங்கர் இருந்ததால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பித்தார். இதன்பிறகு சென்னை கேப்டன் தோனி, விஜய் சங்கர் உள்ளிட்டோர் தீபக் சஹாரைப் பார்த்து சிரித்தனர்.
Next Story