பக்கத்து வீட்டுக்காரர் சண்டையால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..
திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரத்தில் புஷ்பகாந்தன், வசந்தி தம்பதியினர், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களின் எதிர்வீட்டில் வசித்து வரும் குமார் என்பவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து அருகில் வசிப்பவர்களுடன் தகராறு செய்ததாகத் தெரிகிறது. கடந்த ஒன்றாம் தேதி, தகராறு செய்து கொண்டிருந்த குமாரை, புஷ்பகாந்தனும் வசந்தியும் தட்டிக்கேட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வசந்தியை குமார் இடித்து தள்ளியதில், வசந்தி முதல் மாடியில் விழுந்து காயமடைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட குமார் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
Next Story