சபரிமலையில் இன்று மகரஜோதி திருவிழா - 4 நாட்களாக கூடாரம் அமைத்து காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியைக் காண்பதற்காக, அடிப்படை வசதி இல்லாத நிலையிலும், 4 நாள்களாக பக்தர்கள் கூடாரம் அமைத்து மலையிலேயே தங்கி உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரஜோதி இன்று நடைபெறவுள்ளது.
வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், வனப்பகுதியிலும், மலைப் பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி சமைத்து சாப்பிட்டு, மகரஜோதியை காண்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு சிறு தீ விபத்து ஏற்பட்டதால், வனப்பகுதியில் பக்தர்கள் சமைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மகரஜோதியை பார்ப்பதற்காக, கடந்த 4 நாட்களாக ஆபத்தான வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து பக்தர்கள் தங்கி உள்ளனர்.
வனவிலங்குகள் நடமாடும் ஆபத்து நிறைந்த பகுதியாக இருந்தபோதிலும், அதையும் பொருட்படுத்தாமல் ஐயப்பனைக் காண்பதற்காக சிறுகுழந்தைகளுடன் பக்தர்கள் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.