சபரிமலையில் வேன் கவிழ்ந்து விபத்து | சிறுமி உயிரிழந்த விவகாரம் | உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

x

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் பேருந்து ஏறுவதற்கு சிரமப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரத்தில், இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனம் கன்னிமலை பகுதியில் விபத்திற்குள்ளானதில் 10 வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம், பம்பையில் ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் ஏறுவதற்கு சிரமப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், சபரிமலைக்கு செல்லும் சாலைகளின் நிலைமை குறித்து, வெளி மாநில வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்