"அந்த நினைப்பே வரக்கூடாது" - ஏவுகணை விட்டு எச்சரித்த புதின்

x

ரஷ்யாவை தாக்க நினைத்தால் உக்ரைனுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், உயர் அதிகாரிகளுடன் புதின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், கிரிமியாவில் உள்ள பாலம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் தீவிரவாத செயல் என்றும், ரஷ்யாவை தாக்க நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்