ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு கருத்து

x
  • மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
  • ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புதின், உக்ரைன் போருக்கு மட்டுமின்றி கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
  • மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதின், மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை அழிப்பதாகவும், குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு வக்கிரங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் விமர்சித்தார்.
  • குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமே எனவும் புதின் குறிப்பிட்டார்.
  • அதுபோல் பிரார்த்திக்கும் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து தேவாலயம் அறிவித்திருந்ததையும் விளாடிமீர் புதின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்