உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா - முக்கிய நகரங்கள் மின்சாரம் இன்றி தவிப்பு | ukraine
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மழை பொழிந்த நிலையில், பல இடங்களில் மின் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 11வது மாதமாகத் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று திடீரென ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்தது. 120 ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவிய நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உறைபனிக்கு மத்தியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கீவ், எல்விவ், ஒடேசா, கெர்சன், வின்னிட்சியா, ட்ரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Next Story