உக்ரைனை கூறுபோட்டு ஏலம் போடும் ரஷ்யா..! - கொதித்தெழுந்த அதிபர் ஜெலன்ஸ்கி...

x

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு துவங்கிய நிலையில், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்..

லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன், ஜப்போரிஜியா ஆகிய மாகாணங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு துவங்கியது...

முடிவுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்... மேலும் இதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...

அத்துடன், இது உக்ரைன் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல என்று தெரிவித்த ஜெலென்ஸ்கி, இவை குறிப்பிட்ட நாடு மற்றும் மக்களுக்கெதிரான குற்றங்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்