பரவும் வதந்தி... முற்றுப்புள்ளி வைத்த மெட்ரோ
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது...மேலும், இது குறித்த அறிவிப்பு ஒன்றையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள், அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே பகிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், போலியான விளம்பரங்களை நம்பி இழப்புகள் ஏற்பட்டால், மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பாகாது எனவும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story