அமைச்சர் பேசியதாக பரவும் வதந்தி..திமுக MLA புகார்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாக சித்தரித்து, பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசியதாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. இந்நிலையில், வதந்தியை பரப்பிய கலியபெருமாள் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார்.
Next Story