"ஆர்.எஸ்.எஸ் பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை"... "இஷ்டம் போல் பேரணி நடத்துவதற்கே எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
- ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கான அனுமதியை முழுமையாக ஆட்சேபிக்கவில்லை எனவும் இஷ்டம்போல வீதிதோறும் பேரணியை நடத்துவதையே எதிர்ப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
- மேலும், பிஎஃப்ஐ தடை, கோவை குண்டுவெடிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திறந்தவெளியில் பேரணியை நடத்தாமல், மைதானங்களில் மட்டுமே நடத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் பேரணிகளுக்கு அனுமதியளித்துவிட்டு தங்களது பேரணிக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் சார்பில் அப்போது வாதிடப்பட்டது.
- இதனை தொடர்ந்து விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
Next Story