"விவசாயியை திருமணம் செய்தால் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை" - கர்நாடக அரசியல் கட்சி அறிவிப்பு
- கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
- இதனிடையே மக்களை கவர்வதற்காக, இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
- அந்த வகையில், கோலார் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால், விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
- விவசாயிகளை திருமணம் செய்ய பெண்கள் முன்வரவேண்டும் என்ற அவர், அதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.
Next Story