ரூ.200 கோடி மோசடி வழக்கு.. நடிகைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பாலின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த வழக்கில், லீனா மரியா பால் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அப்போது முதல் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடைய நீதிபதி தினேஷ் குமார் சர்மா, விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்