பெண்களுக்கு மாதம் ரூ.1,000 - வெளியானது அடுத்த அதிரடி!!

x

மத்தியப்பிரதேசத்தில், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் இன்று தொடங்கி வைக்கிறார். மத்தியப்பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கைந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஜபல்பூரில் முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கு இதுவரை பெண்களிடமிருந்து 1.25 கோடி பதிவுகள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்