"புதுவை அரசு துறைகளில் ரூ.28.05 கோடி முறைகேடு"... தணிக்கை அறிக்கை பகீர் தகவல்
புதுச்சேரி அரசு துறைகளில் 28 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதி ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அம்சமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட 891 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு துறைகளில் 28.05 கோடி முறைகேடு மற்றும் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2017-20 காலகட்டத்தில் மின் அனுப்புகை மற்றும் பகிர்மான இழப்பின் மதிப்பு 69.51 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், மின்துறை கட்டண வசூல் மோசமான திறனால் மார்ச் 2020ல் 709.6 கோடி நிலுவைத்தொகை இருந்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.