ரூ.225 கோடி நஷ்டம்..! -"பெங்களூரை விட்டு வெளியேறுவோம்" - கர்நாடக முதல்வருக்கு ஐடி நிறுவனங்கள் கடிதம்

x

கர்நாடக முதல்வருக்கு ஐடி நிறுவனங்கள் கடிதம்

ரூ.225 கோடி நஷ்டம்..! - "பெங்களூரை விட்டு வெளியேறுவோம்" - கர்நாடக முதல்வருக்கு ஐடி நிறுவனங்கள் கடிதம்

பெங்களூருவில் நகரின் உட்கட்டமைப்பு சரியில்லாததால் கடந்த வாரம் பெய்த மழையால் 225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாலைகள் வெள்ள நீரில் மிதந்தன.

இதனால் நிறைய பேர் பணிக்கு வர முடியாமல் போனது...

நகரின் உட்கட்டமைப்பு சரியில்லாதது தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு, இதனால் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் கூடும் என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு சார்பில் மீண்டும் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி உடனடியாக ஒயிட்ஃபீல்டு பகுதியில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்