ராஜஸ்தான் தலைமைச் செயலக டைல்ஸ்-க்கு அடியில் அள்ள அள்ள கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள் - நாட்டையே அதிர வைத்த சம்பவம்

x

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் இருந்து 2 கோடியே 31 லட்ச ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள யோஜ்னா பவன் கட்டடத்தின் அடித்தளத்தில், பூட்டப்பட்ட அலமாரியில் இருந்து இரண்டு கோடியே 31 லட்ச ரூபாய் மற்றும் ஒரு கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பகுதியை அணுகக் கூடிய 7 அரசு ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுக் கட்டாக இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய நோட்டுகள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட பல கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரதாப் சிங், பணத்தை பதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்