"2 கோடி ரூபாய்தான் காரணம்" - தற்கொலைக்கு முன் தம்பதி எழுதிய கடிதம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கடன் தொல்லையால், கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூளகிரியில் உள்ள மில்லத் நகரைச் சேர்ந்த சிவக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, 2 மகள்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் மளிகை கடைக் ஒன்றை நடத்தி வந்தனர். பள்ளி விடுமுறை என்பதால், இரு மகள்களும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், தம்பதி இருவரும் கடன் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மளிகை கடையில் வேலை செய்யும் பணியாளர், கடையின் சாவியை வாங்குவதற்காக சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன் தம்பதி எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில், 2 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தொல்லை இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்து. எனினும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்