உள்ளாடைக்கு MRP-ஐ விட ரூ.18 கூடுதல் விலை - பிரபல கடைக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

x

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்ற ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ் நிறுவனத்திற்கு 10 ஆண்டு கழித்து 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ் துணிக்கடையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஓசூரை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடை வாங்கி உள்ளார்.

ஆனால் அதன் விலையை சோதித்த போது எம்ஆர்பி விலையை விட 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில்,ஊழியர்களின் தவறால் விலை மாற்றம் நடந்திருப்பதாக கூறி 18 ரூபாயை அனுப்பி உள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த சிவப்பிரகாசம் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிவப்பிரகாசத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்