"தனியார் நிதி நிறுவனம் ரூ.150 கோடி மோசடி".. அடுத்தடுத்து வந்த அதிரவைக்கும் புகார்கள் - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

x

தர்மபுரியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்று, 150 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வங்கி காசோலை, பத்திரங்களை கொடுத்து ஏமாந்துள்ளதாக பலர், தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி, காரிமங்கலம் மற்றும் பாப்பிரெட்டிபட்டி ஆகிய இடங்களில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நிதி நிறுவனம் நடத்தி வந்த அருண்ராஜ் மற்றும் ஜெகன் ஆகிய இரண்டு சகோதரர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்