"உடல் எடையைக் குறைத்தால் ரூ.10 லட்சம்..!" - ஜெரோதா நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!

x

Work from Homeல் பணியாற்றுபவர்கள் உடல் எடையைக் குறைத்தால் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிதி சேவை நிறுவனமான ஜெரோதாவின் இணை நிறுவனர் நிதின் காமத், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதன்படி நாள் ஒன்றுக்கு 350 கிராம் வரை எடை குறைத்து நல்ல உடல்நலனை மேம்படுத்தும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்... கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து பணியாற்றி உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் இந்த அறிவிப்பால் உத்வேகத்துடன் உடற்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்