அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மோசடி செய்த நபரை கைது செய்த போலீஸார்
கன்னியாகுமரியில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளங்கடை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா ரமீஹா. இவரிடம் குலசேகரத்தை சேர்ந்த பிரபா என்பவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு துறையில் வேலை வாங்கி தருவதாக ஒரு கோடியே 25 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு சந்தனம் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பாத்திமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் பிரபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story