ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட ரூ.1 கோடி கட்டடம்...இடித்து அகற்றிய அதிகாரிகள்
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த வி.கே.ராஜா என்ற தொழிலதிபர், மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 40 அடி பொதுப்பாதை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதாக, குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த கட்டடத்தை 2 வாரத்திற்குள் இடிக்க உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளூர் திட்ட குழுமம் ஆகிய 3 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில், 2 ஆயிரத்து 400 சதுர அடியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டடம், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
Next Story